செம்மஞ்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.!

சென்னை

செம்மஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் பள்ளி மாணவியை ரிப்பன் வெட்ட வைத்து பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

எம்.எல்.ஏவை வரவேற்ற தூய்மை பணியாளர்கள் விரைவில் உங்களை அமைச்சராக பார்க்க ஆசைப்படுகிறோம் என  வாழ்த்தினர். 

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பில் செயல்பட்டு வரும் செம்மஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பள்ளி முழுவதும் அலங்காரம் செய்து பள்ளியின் நுழைவு வாயில் ரிப்பன் கட்டி இருந்ததால் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைப்பது போல் பள்ளி மாணவியை வைத்து ரிப்பன் வெட்ட வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் சட்டமன்ற  உறுப்பினர் அரவிந்த் ரமேஷை தூய்மை பணியாளர்கள் சால்வை அணிவித்து விரைவில் உங்களை அமைச்சராக பார்க்க விரும்புகிறோம் என வாழ்த்தினர். 

அதன்பின் 110 ஆண்கள் 110 பெண்கள் என 220 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. 

நிகழ்வில் பேசிய 25 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டரங்கம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என எம்.எல்.ஏ.தெரிவித்தார்.

செய்தியாளர்

           S S K