செங்கோட்டையில் இலவச பொது மற்றும் அறுவை சிகிச்சை முகாம் .!
தென்காசி

செங்கோட்டையில் இலவச பொது மற்றும் அறுவை சிகிச்சை முகாம்
தென்காசி ஜூலை 10
தென்காசி மீரான் மருத்துவமனை சார்பில் வரும்
13.07.2025, ஞாயிறு காலை 8 மணி முதல் 12 மணி வரை செங்கோட்டை மேலூர் ஏஜி தொடக்கப் பள்ளியில்
இலவச பொது மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
இது பற்றி தென்காசி மீரான் மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலூர் ஏ ஜி தொடக்கப்பள்ளியில் தென்காசி மீரான் மருத்துவ மனை சார்பில் வரும் 13.07.2025 ஞாயிற்று கிழமை இலவச பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாமில் சர்க்கரை நோய்,
இருதய நோய், இரத்தகொதிப்பு ஆஸ்துமா,அலர்ஜி, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள்,
நுரையீரல் நோய்கள், கணையம் பிரச்சனைகள், மலச்சிக்கல், பசியின்மை, திடீர் எடை குறைதல், குடலிறக்கம், சுன்னத், பித்தப்பை கற்கள்,
குடல்புண், குடல் வால்வு,
தைராய்டு கட்டிகள், கர்ப்பப்பை நோய்கள், விதைப் பையில் வீக்கம், சிறுநீரக கற்கள், மூலம், பவுத்திரம், நாள்பட்ட ஆறாத புண்கள், மேலும் முதலைமச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் அனைத்து தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் இலவசமாக இ.சி.ஜி, இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்படும். இந்த முகாமில் தென்காசி மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அப்துல்அஜீஸ், டாக்டர் முகம்மது மீரான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த இலவச மருத்துவ முகாமில் தென்காசி, செங்கோட்டை, பண்பொழி, வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர் அப்துல் அஜீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்