தென்காசியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
தென்காசி

தென்காசியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி ஜூலை 12
தென்காசியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் செங்கோட்டை எஸ்ஆர்எம் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாக மாறுதலை கண்டித்தும், பள்ளி ஆசிரியர்களின் பணத்தை கையாடல் செய்த மாணவிகளிடம் சேர்க்கைக்கும் நீக்கலுக்கும் பணம் வசூல் செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழ் வாணி மீது நடவடிக்கை எடுக்கவும், ஊழல் முறை கேட்டிற்கும் மாறுதலுக்கும் துணை போன சிஇஓ மீது நடவடிக்கை எடுக்க கோரியும், முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி மாவட்ட தலைவர்கள் ஐயப்பன் தங்கராஜ் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். இதில் மாநிலச் செயலாளர் ராஜ்குமார் மாநிலத் துணைத் தலைவர்கள் முஜிபுர் ரஹ்மான் முருகையா மாநில சட்ட செயலாளர் பிச்சைக்கனி
முன்னாள் மாநில பொருளாளர் ஜாக்டீ மாரியப்பன் மாநில அமைப்பு செயலாளர் சண்முகசுந்தரம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆயிஷா மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் மணிகண்டன் மதன்குமார் தென்காசி வட்ட செயலாளர் திருமலை கொழுந்து ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். மாநில அமைப்பு செயலாளர் முத்தையா ஆர்ப்பாட்ட எழுச்சி உரை ஆற்றினார்.
முடிவில் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்