தென்காசி 13வது வார்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா.!
தென்காசி
தென்காசி 13வது வார்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா
தென்காசி நவ 14
தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி 13வது வார்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப் பட்டது.
ஆசிரியர் கௌசல்யா வரவேற்புரை ஆற்றினார்.
நேருவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆசிரியர் வின்சென்ட் குழந்தைகள் தின விழா கொண்டாடப் படுவதின் நோக்கம் பற்றி கூறினார்.
ஆசிரியர் ஜபருல்லாகான்
நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுத்துக் கூறினார்.
மாணவர்கள் நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சும், கவிதையும் பாடல்களும் பாடினர்.மாணவர்கள் நேரு போன்று உடை அணிந்து வந்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் யாஸ்மின், விமலா,தமிழ்ச்செல்வி, து.தமிழ்செல்வி, புன்னகை சுகி ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவின் நிறைவாக ஆசிரியர் மீனா நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
