தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சினிவாசன் பிறந்தநாள் விழா, முதியோர் விடுதியில் காலை உணவு. !
கிருஷ்ணகிரி

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சினிவாசன் பிறந்தநாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இல்லத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் சந்திரமோகன் காலை உணவினை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மக்கள் கட்சியின் சார்பில் தேசிய மக்கள் கட்சியின் தமிழ் மாநில தலைவர் சினிவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா பல்வேறு நலத்திட்டங்களுடன் வெகு விமர்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.
மாநில தலைவர் சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திர மோகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், அவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டி பூஜைகள் செய்து வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இல்லத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு காலை உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவர் டாக்டர் சந்திரமோகன் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் காலை உணவினை வழங்கி, மாநில தலைவர் சீனிவாசன் புகழோடு நீண்ட காலம் வாழ வேண்டி சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார்.
அப்போது தேசிய மக்கள் கட்சியின் மகளீர் அணி செயலாளர் திருமதி உஸ்மா, தேசிய மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் உதயகுமார், இளைஞர் அணி செயலாளர் கோகுலகிருஷ்ணன், மகளிர் அணித்தலைவி தேன்மொழி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் இல்ல பொறுப்பாளர் ஆனந்தி நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்