ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு - செங்கோட்டையன்

ஈரோடு

ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு - செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தமுறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது.

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது அவர், "பெரும்பாலான தவெக தலைவர் விஜய் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடியவராக இருக்கிறார், புதிய வரலாறு படைக்கும் தலைவராக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தவெக விருப்ப மனு குறித்து விநியோகம் குறித்து தலைவர் தான் முடிவு செய்வார். திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே அரசு ஊழியர்களின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.

கூட்டணி விவகாரத்தில் டிவிஸ்ட்

இன்றுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாததால் போராட்டம் வலுத்து கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைவார்கள். கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தான் முடிவு செய்யும். அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மக்களுடன் இணைந்து கூட்டணிக்கு விரும்பும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணியில் இணைவது குறித்து தலைவர் முடிவு செய்வார்.

எங்களை பொறுத்தவரை தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி. அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் தலைவர் வழிநடத்துதல் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதைப்பற்றி இப்போது பதில் சொல்ல முடியாது.

தவெக தான் டார்கெட்

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தவெக வை தான் தாக்குகின்றன. அப்படியென்றால் எங்கள் கட்சி எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். காய்க்கிற மரத்தில் கல்லடி படுவதை போல, மக்களால் தவெக வெற்றி போகிறது என்பதை உணர்ந்துதான் இரண்டு கட்சிகளும் எங்களை தாக்குகின்றன. எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் குறைபாட்டை தாக்கவில்லை. எல்லோரும் எங்களைத்தான் தாக்குகிறார்கள்." என்றார்.