டிவிகே.. டிவிகே.. டிவிகே.. டெல்லி சிபிஐ அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் கோஷம்..!
த வெ க
டில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தின் முன்பு இன்று தமிழக அரசியலின் அதிரடி சத்தம் எதிரொலித்தது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விசாரணைக்காக ஆஜரான நிலையில், அலுவலகத்தின் வெளிப்பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் "டிவிகே..
டிவிகே.. டிவிகே.." என விண்ணதிர முழக்கமிட்டனர்.
டெல்லியின் இதய பகுதியான லோதி சாலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் பெயர் இவ்வாறு முழங்கப்பட்டது அங்கிருந்த பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கையில் கட்சியின் கொடிகளை ஏந்தியபடி, "தளபதி.. தலைவா.." என உணர்ச்சிப் பெருக்குடன் தொண்டர்கள் எழுப்பிய கோஷங்கள் அந்த பகுதியையே அதிர வைத்தன. விசாரணையின் தீவிரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தொண்டர்களின் இந்த எழுச்சி விஜய்யின் செல்வாக்கு தமிழக எல்லைகளைத் தாண்டித் தேசியத் தலைநகர் வரை பரவியிருப்பதை உறுதிப்படுத்தியது.
துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி, தொண்டர்களின் உற்சாகம் குறையவில்லை. இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் நேரலையாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 2026 தேர்தலுக்கு முன்பாக விஜய்க்கு கிடைத்துள்ள இந்தத் தொண்டர் பலம், டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
