அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும், கிருஷ்ணகிரி 16- ஆம் ஆண்டு நடத்தும் மீலாது நபி விழா. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும், கிருஷ்ணகிரி 16- ஆம் ஆண்டு நடத்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு, இறை பெயரால் இஸ்லாமிய ஜோடிகளுக்கு, இலவச நிக்காஹ்(எ) திருமண விழா, பிரியாணி விருந்து கிருஷ்ணகிரி நகரம், புதுப்பேட்டை, லட்சுமணராவ் தெரு, வெல்கம் மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்து கொண்டு சீதனப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ