பா.ம.க. எம்.எல்.ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது - நிறுவனர் இராமதாஸ். !
பா.ம.க.

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணவ - மாணவிகளுக்கு ஆங்கில மொழி புலமையை மேம்படுத்தும் வகையிலான வெலல் அப் திட்டம் அறிவித்து இருப்பதை பாமக மனதார வரவேற்கிறது.
தமிழகத்தில் உரங்களை அதிகளவில் வாங்கி குவித்து சிலர் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருகின்றனர். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் - இதர சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலைகளில் சீரமைப்புப் பணிகளை அரசு விரைந்து மேற் கொள்ள வேண்டும்.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
மேலும், பாமகவில் இருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை, எனக்கு மட்டும் தான் உள்ளது என்று ராமதாஸ் கூறினார்.