பிறந்தநாள் விழா அழைப்பிதழினை குகை காளியம்மன் தவத்திரு ஸ்ரீ முருகன் சுவாமிகளிடம் வழங்கி டாக்டர் சந்திரமோகன் ஆசி பெற்றார்.!

கிருஷ்ணகிரி

பிறந்தநாள் விழா அழைப்பிதழினை குகை காளியம்மன் தவத்திரு ஸ்ரீ முருகன் சுவாமிகளிடம் வழங்கி டாக்டர் சந்திரமோகன் ஆசி பெற்றார்.!

கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழா அழைப்பிதழினை குகை காளியம்மன் தவத்திரு ஸ்ரீ முருகன் சுவாமிகளிடம் வழங்கி டாக்டர் சந்திரமோகன் ஆசி பெற்றார்.

கிருஷ்ணகிரியில் வருகின்ற 30-ம் தேதி விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசு முன்னாள் பொது வினியோக திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இவ்விழா கிருஷ்ணகிரி பழையபேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள முருகன் மஹாலில் நடைபெற உள்ள இந்த முப்பெரும் விழாவிற்கு வருகை தந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தருமாறு கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் குகை காளியம்மன் திருக்கோவில் தவத்திரு ஸ்ரீ முருகன் சுவாமிகளிடம் அதற்கான அழைப்பிதழ்களை டாக்டர் சந்திரமோகன் வழங்கினார்.

அப்போது இந்த முப்பெரும் விழாவிற்கு கட்டாயம் வருகை தந்து வாழ்த்துவததோடு  ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களுக்கு அம்மன் அருளாசி வழங்கிட வருகைத் தருமாறு டாக்டர் சந்திரமோகன் கேட்டுக் கொண்டார்.

அப்போது  சமுக நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ரோஷன் ரஷீத், ஜெய்ஷன், குகை காளிராம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ