அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.!
கிருஷ்ணகிரி
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆதரவற்ற முதியோர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது
அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி பிரியங்கா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழவும் அதேபோல் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் அவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் மென பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதியோர் காப்பகத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு இரவு உணவு மற்றும் இனிப்புகளும் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் ஹரி முன்னிலை வகித்தார், மாவட்டபொதுச் செயலாளர் பாண்டுரங்கன், சேவதாள மாவட்ட தலைவர் தேவராஜ் , காங்கிரஸ் வட்டாரத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
