காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற 22 ஆவது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி.!

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற 22 ஆவது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி.!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற
22 ஆவது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள
ரிச்மான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் ஷோடோகான் கராத்தே டு ஃபெடரேஷன் மற்றும் சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் 22 ஆவது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை பள்ளியின் நிறுவனர் மாதேஷன் குத்து விளக்கு ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து  தென்னிந்திய கராத்தே சேர்ந்த தலைவர் நடராஜ், தென்னிந்திய கராத்தே அசோசியேஷன் மற்றும் சிலம்பம் பயிற்சியாளரான மாரியப்பன் ஆகியோர் தலைமையில் கராத்தேப் போட்டிகள் வயது அடிப்படையில் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து இறுதிப் போடிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் அவர்கள் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்து சூளகிரி சன் மேரி மெட்ரிக்பள்ளி சாம்பியன்ஷிப் கேடயத்தை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து  இரண்டாம் பரிசை சந்தூர் கலைமகள் மெட்ரிக் பள்ளிக்கும், மூன்றாம் பரிசை காவேரிப்பட்டினம் கருக்கஞ்சாவடி ரிச்மான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கேடயத்தினை வழங்கினார். 

மேலும் இந்த பரிசளிப்பு விழாவில் பள்ளியின் தாளாளர் கோகுல், இளவரசு, கீர்த்தி, முதல்வர் சிஸ்டர் சலோமி மேரி, தாளாளர் ஸ்டெல்லா, தாளாளர் மூர்த்தி, முதல்வர் விஜயலட்சுமி, பையூர் முதல்வர் முருகேசன், மஜித் கொள்ளஹல்லி தீர்த்தகிரி, முனைவர் கே.அருள், காவேரிப்பட்டினம் சவுளூர் முனைவர் சித்ரா, தர்மபுரி எட்டாவது கருப்பு பேட்டை தென்னிந்திய கராத்தே சேர்ந்த தலைவர் நடராஜ், 3வது கருப்பு பட்டை தருமபுரி துணைத்தலைவர் வெங்கடேசன், திருக்கோவிலூர் 2வது கருப்பு பட்டை எம்.என்.கே முருகன், மொரப்பூர் இரண்டாவது பிளாக் பெல்ட் வேலன், தர்மபுரி பிளாக் பெல்ட் சதீஷ், உள்ளிட்டவர்கள் சிறப்பு நடுவர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ஆறாவது கருப்பு பட்டை தென்னிந்திய கராத்தே அசோசியேசன் செயலாளர் ரென்சி எம்.கே.மாரியப்பன், காவேரிப்பட்டினம் கருப்பு பட்டை சூர்யா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ