கூடைப்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுகளுக்கும் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.!

கிருஷ்ணகிரி

கூடைப்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுகளுக்கும் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.!

கிருஷ்ணகிரியில் மின்னொளியில் துவங்கிய மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுகளுக்கும் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் 7-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி நடைபெற்று வந்தது.

இந்தப் போட்டியில் சென்னை, கோவை, கரூர், தர்மபுரி, ஓசூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், நெய்வேலி, திருநெல்வேலி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைசிறந்த 24 அணிகள் கலந்துக் கொண்டன.. மின்னொளியில் துவங்கி உள்ள இந்த கூடைப்பந்துப் போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு இறுதி போட்டியில் சென்னை போலீஸ் அணியும், கிருஷ்ணகிரி அணியும் தகுதி பெற்றது.

மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியை சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

பின்னர் இரு அணிகளும் சம நிலையில் விளையாடிக்கொண்டு இருந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இறுதிப் போட்டி வெற்றி தோல்வி இன்றி இரு அணிகளும் வெற்றிப் பெற்றதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை போலீஸ் அணி மற்றும் கிருஷ்ணகிரி அணிக்கும்  சுழல் கோப்பை மற்றும் பரிசு தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

மேலும் இந்த விளையாட்டுப் போட்டியில்  நகர செயலாளர் கேசவன், அமைப்பு சார ஓட்டுனர் அணி செயலாளர் ஆஜி,  அமமுக மாவட்ட செயலாளர் அறிவழகன், ஒன்றிய செயலாளர் குமார், வெங்கடாசலம், கவுன்சிலர் மாதேஷ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கில்பெர்ட், துணைத் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் ராகவேந்திரன், துணை செயலாளர் சபாஸ் பாஷா மற்றும் அன்பு ராஜ் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ