எருது விடும் விழாவிற்கான கால்கோல் நடும் விழா கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

எருது விடும் விழாவிற்கான கால்கோல் நடும் விழா கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மோட்டூர் கிராமத்தில் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள எருது விடும் விழாவிற்கான கால்கோல் நடும் விழா கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக  வருகின்ற 28 ஆம் தேதி சின்ன மோட்டூர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சுமார் 300 க்கும் மேற்பட்ட எருதுகள் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான கால்கோல் நடும் விழா கிராம மக்கள் முன்னிலையில்
ஊர் கவுண்டர் நாராயணன், மந்திரி கவுண்டர் கண்ணன், கோல்காரர் தருமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கால்கோல் நடும் விழாவினை  மீசை அர்சுணன் பூமி பூஜை செய்து தடுப்பு அரண் அமைக்கும் பணியினை துவக்கிவைத்தார்,

அப்போது தமிழர்களின் பாரம்பரியத்தினை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுத் தோறும் மதுரை, அலங்காநல்லூர், மீளமேடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிகட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா மற்றும் மஞ்சு விரட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக நாட்டுகள் அழிவில் இருந்து காப்பாற்றும் விதமாக நாடு இன மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக சின்ன மோட்டூர் கிராமத்தில் முதல்முறையாக மாபெரும் எருது விடும் விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவின் வாயிலாக விவசாயிகள் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக எருது விடும் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்ளும் எருதுகளுக்கு முதல் பரிசாக 10 கிராம் தங்க நாணயம் உள்ளிட்ட 101 பரிசுகளுக்கும் தங்க நாணயங்களாக வழப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் இந்த எருது விடும் விழாவில் வெற்றி பெறும் எருதுகளுக்கு பரிசு தொகை, மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் வருகின்ற 28- தேதி சின்ன மோட்டூர் கிரமத்தில் நடைபெற உள்ள எருது விடும் விழாவில் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட உள்ள இந்த எருது விடும் விழாவில் கலந்து கொள்ள உள்ள  எருதுகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளதாக  விழா ஏற்பாட்டாளர் மீசை அர்சுணன் தெரிவித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ