கோயம்புத்தூர் ஆனைக்கட்டியில்  தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. !

கோவை

கோயம்புத்தூர் ஆனைக்கட்டியில்  தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. !

கோயம்புத்தூர் ஆனைக்கட்டியில்  தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்டம், ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசாட்ர்டில் வைத்து ஜனவரி 10ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (டியூஜே) மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில பொது செயலாளர் கடலூர் ரமேஷ், பொருளாளர் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் வரும் மார்ச் மாதம் சென்னையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான விழா குழு தேர்வு பற்றிய ஆலோசனையும் நடைபெற்றது. பத்திரிகையாளர் குரல் புத்தகத்திற்கு மாவட்டம் தோறும் சந்தாதாரர்களை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்று தர 2 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கோவை மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்திற்கான ஏற்பாடுளை செய்திருந்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில துணை தலைவர்கள் பிரபாகரன், கொழுமம் தாமோதரன், தேசிய குழு உறுப்பினர் மோகன்ராஜ், டியூஜே கோவை மாவட்ட தலைவர் அருண், டியூஜே கோவை மாவட்ட பிஆர்ஓ., சதிஷ் ஆகியோர் கொட்டும் மழைக்கு இடையிலும் சிறப்பாக செய்திருந்தனர். 

ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி டியூஜே தலைவர் மதிமகாராஜா, மாநில துணை தலைவர் சேவியர், உயர்மட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மூத்த உறுப்பினர்கள் கழுகு ராஜேந்திரன், திருச்சி சுப்பையா பாண்டியன், ராமலிங்கம், பழனிக்குமார், டியூஜே தூத்துக்குடி மாவட்ட தலைவர் இருதய ஞானரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், தேசியகுழு உறுப்பினர் கிம.சங்கர், சேலம் காதர்ஷெரிப், திருத்தணி வினோத், காஞ்சிபுரம் கதிரவன், லட்சுமிகாந்த், மாசிலாமணி, நாகராஜ், பரமக்குடி மாமு ஜெயக்குமார், குணசீலன், காசி, சென்னை லட்சுமணன், யோகராஜ், பார்திபன், சுராஜ், தர்மபுரி சுரேஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் மாருதி.மனோகரன், செயலாளர் பழனி, கஜேந்திரன், ஜகன், குரு ராகவேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்  நசீர்,  ஏற்காடு அசோக், தஞ்சை பத்மா அம்மா, சுரேஷ்குமார், பூரணி, பெங்களூரு முத்துகாந்தன், காஞ்சிபுரம் நாகராஜ், தினவேல் பன்னீர்செல்வம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ