தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் பண்டிகை .!

சென்னை

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம் காவல் ஆணையர் அமல்ராஜ் பங்கேற்பு.

காவல்துறை பணி மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான பணி, உதவி செய்யுங்கள் அது அவர்கள் வாழ்வில் ஒரு திருவிழாவாக மாறும் என குட்டிக் கதை சொல்லி பொங்கல் வாழ்த்து கூறினார் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ். 

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சேலையூர் பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

இதில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். 

ஆயுதப்படை மைதானம் கிராமத்தை போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, மேலும் கோலப்போட்டி, உரி அடித்தல், கயிறு இழுத்தல், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் பேசிய தாம்பரம் காவல் ஆணையர் அமலராஜ் அவர்கள்:- 

சிறு வயது முதலே பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். ஒரு சில நிகழ்வுகள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது ஏன் ஆழமாக பதிந்திருக்கிறது என்றால், கிராமத்தில் ஒரு மூதாட்டி தனியாக ஒரு வீட்டில் இருந்தார், ஒரு விலை உயர்ந்த கார் அவரது வீட்டின் முன்பு வந்து நின்றது, காரில் இருந்து இறங்கியவர்கள் யார் என தெரியவில்லை, நீங்கள் யார் என அந்த வயதான பெண்மணி கேட்டார், அதற்கு அவர் என்னை நியாபகமில்லையா, நான் பள்ளி படிக்கும் போது என் தாய் இறந்துவிட்டார், நான் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தேன், எனக்கு அப்போது நீங்கள் தான் சாப்பாடு கொடுத்தீர்கள் நீங்கள் அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்தீர்கள் என்றார். 

ஊருக்கு சென்று தாத்தா பாட்டியோடு பொங்கல் கொண்டாட வேண்டும் என்ற போது நான் குடுமத்துடன் உங்களிடம் அழைத்து வந்தேன் என்றார். சிறு சிறு உதவிகள் மற்றவர்களுக்கு செய்யும் போது அது ஒரு விழாவாக மனதில் நிலைத்து நின்று விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

காவல்துறை ஒரு பணி மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான ஒரு வாய்ப்பு நம்மால் இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக மாறிவிடும், இது காவல் துறைக்கு மட்டுமே தொடர்ந்து கிடைக்க கூடிய வாய்ப்பு, வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள் எல்லாருடைய வாழ்க்கையில் நாம் உதவி செய்யும் போது அது அவர்களுடைய வாழ்க்கையில் தினமும் ஒரு திருவிழாவாக அமையும், 

பொங்கல் விழாவை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என பேசி உரையை நிறைவு செய்தார். 

நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையர், இணை, துணை, உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர் பொங்கல் சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றம் செய்தும், சுற்றுலா தளங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்

        S S K