பெரிய மாரியம்மன் கோவிலில் சௌபாக்கிய லட்சுமி அம்மனுக்கு ஆடி வெள்ளி நிறைவு விழா .!

கிருஷ்ணகிரி

பெரிய மாரியம்மன் கோவிலில் சௌபாக்கிய லட்சுமி அம்மனுக்கு ஆடி வெள்ளி நிறைவு விழா .!

கிருஷ்ணகிரியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் சௌபாக்கிய லட்சுமி அம்மனுக்கு ஆடி வெள்ளி நிறைவு விழாவில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள சௌபாக்யவதி லட்சுமி அம்மனுக்கு ஆடி வெள்ளி தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் 100 ரூபாய் 20 ரூபாய் பத்து ரூபாய் என 4 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. 

பொது மக்கள் அனைவருக்கும் செல்வம், செழிப்பு, உடல் நலம் பேணும் வகையில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று. விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.