மரகத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பஜனை பாடல் சிவ பூஜை நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மாங்கனி மலை மரகத லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பஜனை பாடல் சிவ பூஜை நடைபெற்றது. சாமிக்கு பால் தயிர் நெய் பன்னீர் பஞ்சாமிர்தம் சந்தனம் குங்குமம் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் சிவனடியார்கள் மாதையன், கோவிந்தன், வீரபத்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் 50 மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு சுவாமி பிரசாதம் நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்
மாருதி மனோ
