காவேரிப்பட்டணத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி.!
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி 93 ஆம் ஆண்டு பிறந்தநாள்- சுயமரியாதை நாள் விழா.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காவேரிப்பட்டணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93- ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி காவேரிப்பட்டணம் பெரியார் சிலைக்கு மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் தி.கதிரவன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத்தலைவர் பெ.செல்வம், பொதுக்குழு மேனாள் உறுப்பினர் தா.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் வே.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் பூ. இராசந்திபாபு, புலியாண்டு சி.இராசா, எம்.இரஞ்சித், கோவிந்தசாமி உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியார் கி.வீரமணி அவர்களின் 93-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சுயமரியாதை நாளாக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
