தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்படினம் அருகே நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்து, அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்படினம் அருகே நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது,

தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாநில துணைத்தலைவர் மூர்த்தி, மாநில அமைப்பாளர் ராம்தாஸ், மாநில துணைச் செயலாளர் கோனப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார், மாநில துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் இந்த கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகளை மாநில தலைவர் வேணுகோபால் அறிமுகம் செய்து வைத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தின் போது.....
மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் செய்ய வேளாண்துறை, தோட்ட கலைத்துறை மூலம் அரசு இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் இலவமாக வழங்கிட வேண்டும்,
தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஏரிகளில் உள்ள சீமை கருவேல செடிகளை அகற்றிட வேண்டும்,
தமிழகத்தில் மா விவசாயத்தினை காத்திட அனைத்து மாவட்டங்களிலும் மா ஏற்றுமதி மையம் அமைக்கப்பட வேண்டும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்ய அனுமதி அளித்திட வேண்டும்,
தமிழகத்தில் மத்திய மாநில அரசுகள் தேசிய மாவட்ட அனைத்து வங்கிகளிலும் உள்ள விவசாயிகள் பெற்ற விவசாய கடன், பயிர் கடன், நகை கடன் ஆகியவற்றை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,
விவசாயிகள் சாகுபடி செய்துள்ளபயிர்களை அதிக அளவில் நாசம் செய்யும் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், மயில்களை கட்டுப்படுத்த விளைநிலங்களில் மின் வேலி அமைக்க வேண்டும்,
விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்து அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் போது தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த அதிரடி பிரபு, ராஜி, செல்வராஜ், ராமமூர்த்தி, வெங்கட்ராமன், சம்பத், கோபால்ட், ஜெயராஜ், சிதம்பரம், ரங்கநாத், குள்ளப்பன், சீனிவாசன், சித்தாலிங்கம், முனியப்பன், மூர்த்தி, அண்ணாமலை, தமிழரசன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
