செங்கோட்டையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு.!
தென்காசி
செங்கோட்டையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு
தென்காசி டிச 24
மகாத்மா காந்தி நகர்ப்புர நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தத் துடிக்கும்
ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும் அதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று செங்கோட்டை மேற்கு ஒன்றியம் செங்கோட்டை பார்டர் பகுதியில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை ஒன்றிய தலைவர் திவான் ஒலி தலைமை வகித்தார். இதில் மமக சார்பில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சலீம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பண்பொழி செய்யது அலி, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் முகபிலாஷா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் விஸ்வை அப்துல் காதர், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப்,
SMI மாவட்டச் செயலாளர் மஜித் ஷா, செங்கோட்டை கிளைத் தலைவர் செங்கை ஆரிப், செங்கோட்டை நகர செயலாளர் யாசர் அரபாத், பொருளாளர் ஹக்கீம், வலசை கிளைத்தலைவர் அப்துல் காதர் பண்பொழி, கிளை தலைவர் மற்றும் கிளை செயலாளர் மன்சூர் மற்றும் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
