வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு.!.

கிருஷ்ணகிரி

வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு.!.

வேகத்தடை அமைக்க மனு அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி PTA தலைவர் Ln.Er.K.S.கௌதம் மத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் (AE)  நேதாஜியை சந்தித்து, போச்சம்பள்ளி கல்லாவி ரோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பழைய போச்சம்பள்ளி திரும்பும் வழி- RI அலுவலகம் முன்பும், ராசி தியேட்டர் முன்பும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார்.

கடந்த  மாதம் அந்த வழியில், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் இளைஞர்கள் வேகமாக வாகனம் ஓட்டி வந்ததால் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் விவரித்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ