கடையை அபகரித்த கந்து வட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் கந்து வட்டி மூலம் இரண்டு கடைகளை பூட்டி அபகரிப்பு. நடவடிக்கை எடுத்து தங்களது கடையை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினைக் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர் ஜோதி. இவர் சூளகிரி பேரிகை சாலையில் பேன்சி ஸ்டோர் மற்றும் புட்வேர் கடையை நடத்தி வருகிறார். இரண்டு அடுக்கு மாடியாக இந்த கடைகள் இயங்கி வருகிறது,
இந்த நிலையில் தனது குடும்ப கஷ்டத்திற்காக ஜோதி அதேப் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் மஞ்சுளா என்பவரிடம்
ரூ.10 லட்சம் ரூபாய், பத்து ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். இதற்கு வட்டியாக மாதம் தோறும் பணமாக ரூ 1 லட்சம் ரூபாய் கட்டி வந்துள்ளார்.
இதுவரை அசல் மற்றும் வட்டி என 60 லட்சம் ரூபாய் திரும்பி கொடுத்துள்ள போதும் கடைகளையும் அபகரித்துக் கொண்டு கடைகளை தர மறுத்ததோடு அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதால் எங்களால் உயிர் வாழ முடியாத நிலை உள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட ஜோதி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினைக் கொடுத்தார்.
மேலும் இந்த மனுவில் சூளகிரியில் வசித்து வருகிறேன், குடும்ப சூழ்நிலையாக கடையின் அருகில் உள்ள மஞ்சளா என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினேன்,
அதற்கு வட்டியாக மாதம் தோறும் ரூபாய் 1 லட்சம் வீதம் அசல் பணத்துடன் 60 லட்சம் வரை அபராத வட்டியுடன் கந்து வட்டியாக இது வரை 60 லட்சம் வாங்கி உள்ளனர்.
தற்போது எங்களது இரு கடைகளையும் பூட்டி அபகரித்துக் கொண்டனர். இது குறித்து கேட்டால் மஞ்சுளா அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். கடையை அபகரித்து கொண்டதால் வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அபகரித்து கொண்ட இரண்டு கடைகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
