மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனான குறைத் தீர்க்கும் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனான குறைத் தீர்க்கும் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடான குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓசூர் தொழிற்சாலைகளில் உள்ள சிலிண்டர்கள் காலவாதியாகி உள்ளதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்திட வேண்டும் என டாக்டர் சந்திரமோகன் வலியுறுத்தினார்.
.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடனான குறைத் தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  தினேஷ் குமார் உத்தரவுடி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட வழங்க அலுவலர் திருமதி கீதா ராணி தலைமை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன், மாவட்ட  வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் தங்கப்பெருமாள், தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசினார். அப்போது ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை வருவாய் துறையினர் தீயனைப்பு துறையினர் ஆய்வு நடத்திட வேண்டும்.

இதில் தொழிற்சாலைகளில் உள்ள சிலிண்டர்களை முறையாக வைத்துள்ளனரா என்றும், இந்த சிலிண்டர்கள் ஏதேனும் பாரத்,  தியாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும். குறிப்பாக தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் கையுறைகள் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்,

தொழிற்சாலைகளில் இயங்கும் ஜெனரேட்டர் பகுதிகளில் தீயணைப்பு வாளிகள் தயார் நிலையில் வைத்து இருக்கப்பட வேண்டும்,

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எரிவாயுவு கூடத்திற்கு பாரத் எச்.பி. விற்பனையாளர்கள் வருவதே இல்லை என குற்றம் சாட்டியதோடு அடுத்து நடைபெறும் கூட்டத்திற்கு இவர்கள் கட்டாயம் வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் இக்கூட்டத்தில் கேஸ் ஏஜென்சிகள் சங்கத் தலைவர் ஓசூர் வெங்கடேஷ், கேஸ் ஏஜென்சி அஜீத் குமார், இராம மூர்த்தி, ராஜேஷ், ராஜா சேகர், கோவிந்த் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் பிரேமலதா, ஜாய், அக்கண்ணன், நம்பி, ஜெய்சன் மற்றும் பறக்கும் படை வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானர்கள்  கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ