கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு அமோக விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி.! பொங்கல் பண்டிகையில் நல்ல விலைக் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு அமோக விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி.! பொங்கல் பண்டிகையில் நல்ல விலைக் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி பொங்கல் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் தனி கவனம் செலுத்துவது உண்டு.

கடந்த ஆண்ட இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி நரிமேடு, காவேரிப்பட்டினம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் மழை கைக்கொடுத்தால் எதிர்பார்த்தபடி கரும்பு விளைச்சல் கண்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கரும்பு விவசாயி மாரியப்பன் கூறுகையில்... கடந்த 12 ஆண்டுளுக்கு மேலாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி செய்து வருகிறேன், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கரும்பு 7 அடி முதல் 10 அடிவரை நன்கு வளர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகள் இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
- கடந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் தொகுப்புகளுடன் கரும்பும் வழங்கியது. அது போல இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஆகையால் தமிழக அரசு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் வலியுறுத்தினார்.
மேலும் கடந்த ஆண்டு தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து ஒரு கரும்பு ரூ 27 ரூபாய்கு கொள்முதல் செய்தது, ஆனால் இந்த ஆண்டு உரம் மற்றும் கூலி உயர்ந்து உள்ளதால் இந்த பொங்கல் பண்டிகைக்கு ரூ.30 -க்கு கொள்முதல் செய்ய முன்வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
