தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

கிருஷ்ணகிரி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து நிலை காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்பி விட வேண்டும்,
கிராம உதவியாளர், சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியாளர், ஊர் புற நூலகர்கள், எம் .ஆர் .பி செவிலியர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை  முற்றிலுமாக ஒழித்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை 1-4-2003 முதல் மீண்டும் அமல்படுத்த வேண்டும்,
அரசு ஊழியர்களிடம் இருந்து  பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகையையும் மற்றும் அரசின் பங்களிப்பு தொகையையும் வட்டியுடன் சேமநல நிதியாக மாற்ற வேண்டும், அரசு அலுவலங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 21,000 எனவும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 எனவும் தமிழ அரசு நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ