கிருஷ்ணகிரி அருகே நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்.எல்.ஏ. .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை சட்ட மன்ற உறுப்பினர் துவக்கிவைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அணை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நலன் காங்கும் ஸ்டாலின் மருத்துவ முகம் நடைபெற்றது.
இந்த முகாமினை சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான மதியழகன் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவ முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவ சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மற்றும் மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது
மக்கள் பயன் பொறும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் பச்சிக்கானப்பள்ளி, காவேரிப்பட்டணம், சோக்காடி, மோரமடுகு என பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமாக மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் இந்த முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார்.
இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர்,உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீ, டேம் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேலுமணி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
