மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிப்பார்ப்பு பணிகளை, கர்நாடக மாநில இணை தலைமை தேர்தல் அலுவலரும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறுப்பு அலுவலருமான வி.ராகவேந்திரா நேரில் பார்வையிட்டார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஐ- முன்னிட்டு நடைபெற்று வரும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிப்பார்ப்பு பணிகளை, கர்நாடக மாநில இணை தலைமை தேர்தல் அலுவலரும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறுப்பு அலுவலருமான வி.ராகவேந்திரா மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கோபு ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ