கிருட்டினகிரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவிகள் களப்பயணம் .!
கிருஷ்ணகிரி

கிருட்டினகிரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவிகள் களப்பயணம்.
கிருட்டினகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 400 பேர் இன்று மாவட்ட அருங்காட்சியகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
இந்த மாணவிகளுக்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், அவற்றின் பயன்பாடுகள், மாவட்டத்தில் பலபகுதிகளிலிருந்து கண்டறியப்பட்டு, பெறப்பட்ட பல்வேறு நடுகற்கள் குறித்து மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் விளக்கினார்.
மாவட்டத்தில் உள்ள நம் முன்னோர்கள் பயன்படுத்திய வாழ்வியல் பொருட்கள், புதை படிவங்கள் மற்றும் கலை மற்றும் இசை சார்ந்த பொருட்கள் தொடர்பான கருத்துக்கள் குறித்தும்.விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் வரலாற்று ஆசிரியர்கள் ரவி, செல்வகுமார், ஆரோக்கியமேரி, வரலாற்று ஆர்வலர் மாருதி மனோகரன், உருது ஆசிரியர் நயாசுல்லா, அறிவியல் ஆசிரியை ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்க்.
இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ