மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியினர் சார்பில், காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வளித்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் இன்று காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வளித்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
மேலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக ஒன்றிய பாஜக அரசு அண்மையில் நடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அத்திட்டம் மகாத்மா காந்தியின் பெயரில் இருப்பதால் அதனை ஏற்க முடியாத நிலையில் அத்திட்டத்தின் பெயரை மாற்றவேண்டும் என்கிற உள்நோக்கத்துடனும் மத்திய அரசு வி.பி.ஜி.ராம். ஜி என புதிய பெயரை வைத்து புதிய மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி 100 நாள் வேலை திட்டத்தினை அழிக்கப்பார்க்கும் மத்திய அரசுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசினனைக்கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை, திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ஏழைகளுக்கு வாழ்வு தந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக ஒரிஜினல் திட்டத்தை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் இதே போல் பர்கூர் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஓசூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ஜாவித்கான், முன்னாள் அதில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் முத்து, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, கருணாமூர்த்தி, நகர பொறுப்பாளர் ஸ்ரீராம், வட்டார பொறுப்பாளர் செல்வராஜ், ராகுல் காந்தி போர் படை த்தளபதி ராமச்சந்திரன், சரவணன், முஸ்தபா, தேவேந்திரன், கோவிந்தன் மற்றும் திமுகவை சேர்ந்த நகரச் செயலாளர் சாதிக் , ராஜா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
