மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் செயலைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

இந்தியா கூட்டணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் செயலைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில்  இந்திய கூட்டணி கட்சியினர் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் 100 நாள் வேலையை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் மத்திய அரசினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் திமுக எம்.பி. சுகவனம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி. சேகர், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக
ஒன்றிய பாஜக அரசு அண்மையில் நடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி  திட்டம் மகாத்மா காந்தியின் பெயரில் இருப்பதால் அதனை ஏற்க முடியாத  நிலையில் அத்திட்டத்தின் பெயரை மாற்றவேண்டும் என்கிற உள்நோக்கத்துடனும் மத்திய அரசு வி.பி.ஜி.ராம். ஜி என புதிய பெயரை வைத்து புதிய மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி 100 நாள் வேலை திட்டத்தினை அழிக்கப் பார்க்கும் மத்திய அரசுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசினைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆடிட்டர் வடிவேல், வழக்கறிஞர் அசோகன், அஞ்சூர் நாகராஜ், கோடாலி வழவன், உள்ளிட்ட காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை, திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ஏழைகளுக்கு வாழ்வு தந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்க்குலைக்கும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

செய்தியாளர்

மாருதி மனோ