அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளின் ஒன்றான சிலம்ப பயிற்சி முகாம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் துவங்கிய சிலம்ப பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குரல் துவக்கி வைத்து தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதில் பெண்கள் முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளின் ஒன்றான சிலம்ப பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவுபடி துவங்கியது.

அரசு மகளிர் கலை கல்லூரியில் துவங்கிய இந்த சிலம்ப பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குரல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து உரையாற்றினார்.
பெண்கள் தன்னந்தனியாக தைரியமாக செல்ல வேண்டுமென்றால் சிலம்பம் உள்ளிட்ட ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கட்டாயம் கற்றுயிருக்க வேண்டும், இதுக்காகதான் தமிழக அரசு அரசு பள்ளிகள் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளும் தற்காப்பு கலையை கட்டாயம் கற்றுகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சியை துவங்கியுள்ளது. இந்த சிலம்பம் பயிற்சியில் மாணவிகளாகிய நீங்கள் கட்டாயம் சிரமம் இன்றி கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். அப்போதுதான் தைரியமாக எதிர்த்து போராட இந்த சிலம்ப பயிற்சி கைகொடுக்கும், ஆகையால் மாணவிகளான நீங்கள் கட்டாயம் இந்த பயிற்சியை கற்றுக் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிலப்பம் பயிற்சியாளர் குரு ராகவேந்திரன் சிலம்பத்தின் அடிப்படை பயிற்சிகள் குறித்து மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தார்,
இந்த சிலம்பம் பயிற்சி மேற்கொண்ட மாணவிகள் கூறுகையில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான
இந்த சிலம்பம் பயிற்சி கற்றுக்கொள்வது மிகவும் மகிழ்ச்சியமாக உள்ளது. என்னை போன்ற பல்வேறு மாணவிகளும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சிலம்பம் பயிற்சியானது எங்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் ,
இந்த பயிற்சி முகாமில் கல்லூரி முதல்வர் கீதா உள்ளிட்ட அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
