அனைத்து கட்சிக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்களின் பெயரை நீக்க தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல். !

கிருஷ்ணகிரி

அனைத்து கட்சிக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்களின் பெயரை நீக்க தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல். !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இன்னும் இறந்து போனவர்களின் பெயர் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி இந்த பெயர்களை உடனடியாக நீக்கப்பட  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில்  அங்கிகரிக்கப்பட்ட  அனைத்து கட்சியினர்களின் கூட்டம் நடைபெற்றது.
சார் ஆட்சியர் (பொறுப்பு) தனஜெயன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி,  திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட,
கட்சிகளின் பிரதிகள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்த்தல் வேண்டும், 18 வயது பூர்த்தியான அனைவரது பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேண்டும், போலியான முகவரி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ந்தவர்களின் பெயர்களை நீக்கப்படவேண்டும், என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திர மோகன்....


 
ஓசூர், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை , கெலமங்கலம், ராயக்கோட்டை பகுதிகளில் இறந்து போனவர்கள் பெயர் வாக்காளர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்த பெயர்களை வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் சென்று அங்கு குடி அமர்த்தப்பட்டவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியில் இடம்பெற்றுள்ளது. 

இவர்களை உடனடியாக வருகின்ற சட்டமன்றத் தேர்தல் வருவதால் உடனடியாக மேற்படி பெயர்களை  நீக்கப்பட வேண்டும், ஓசூர், தளி , வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறு சீரமைப்பு பணிகளை விரைவுப்படுத்தப்பட வேண்டும், வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது நீண்ட தூரம் இல்லாமல் அருகிலேயே இருக்குமாறு வாக்குச்சாவடி மையம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் 
திமுக வட்ட பிரதிநிதி ஜெய்சன், நாம் தமிழர் கட்சி சிவா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ