பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் போட்டி.!

கிருஷ்ணகிரி

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் போட்டி.!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பர்கூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் பேர்வே எண்டர்பிரைசஸ் லிமிடெட் (யூனிட் 1, 2) ஆகிய நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் சிறந்த அறிவியல் மாடல் கண்காட்சியை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

உடன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் நிறுவன முதன்மை தலைமை இயக்குனர் மணிமாறன் அருணாச்சலம், செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் நிறுவன பொது மேலாளர் அருள் மகா விஷ்ணு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ