தாம்பரத்தில் அறிஞர் அண்ணா ஆம்புலன்ஸ் சங்கத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவில் பெயர் பலகை திறந்து வைத்து அன்னதானம் வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம். !
சென்னை
தாம்பரத்தில் அறிஞர் அண்ணா ஆம்புலன்ஸ் சங்கத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவில் பெயர் பலகை திறந்து வைத்து அன்னதானம் வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம்.
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் அறிஞர் அண்ணா ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவை முன்னிட்டும், இரண்டாமாண்டு துவக்க விழாவையொட்டி பெயர் பலகை திறந்து வைத்தும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகேஸ்வரன் மற்றும் தாம்பரம் பார் அசோசியேசன் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சங்கத்தின் தலைவர் முரசு ராஜேந்திரன், செயலாளர் பிரேம்குமார், ஏழுமலை, ஜெயக்குமார், அறிஞர் அண்ணா பேரவை ஐடி பிரிவு தலைவர் ஜோஸ்வா, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேரவை தலைவர் முத்து, திருச்சி அறிஞர் அண்ணா பேரவை தலைவர் காமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
நிகழ்வின் இறுதியாக அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
S S K
