குறும்பலாப்பேரி அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் .!
தென்காசி
குறும்பலாப்பேரி அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள்
பழனி நாடார் எம்.எல்.எ. வழங்கினார்.
தென்காசி, டிச.10
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள அயன் குறும்பலாப்பேரி அரசு பள்ளியில் 47 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பழனிநாடார் எம்.எல்,ஏ. வழங்கினார்.
தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களின் ஒன்றான அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் திட்டம் தமிழக முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.இதன்படி தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அயன் குறும்பலா பேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் 47 பேருக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை பவானாபாய் குனசெல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளமதி வரவேற்றார். இதில் தென்காசி சட்டமன்றஉறுப்பினர் எஸ்.பழனி நாடார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிர மணியன், மாவட்ட பிரதிநிதி மேகநாதன்,
தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜசேகர், கிராம கமிட்டி தலைவர் காமராஜ், இளைஞர் காங்கிரஸ் சத்தியமூர்த்தி, அரசு ஒப்பந்ததார் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
