தென்காசியில் இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் , மாநில கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் பங்கேற்பு.!

தென்காசி

தென்காசியில் இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் , மாநில கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் பங்கேற்பு.!

தென்காசியில் இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் , மாநில கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் பங்கேற்பு

தென்காசி டிச 15

தமிழ்நாடு நீதி மன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ ஃபைலிங் முறையை நடைமுறைப்
படுத்திய நிலையில் அதனை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், நேற்று காலை 10:30 மணிக்கு தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டமும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும், நடை பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தென்காசி பார் அசோசியேசன் தலைவர் சிவக்குமார் தென்காசி அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மாடக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். செங்கோட்டை சாமி ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆலடி மானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கரூர் மாரப்பன் கலந்து கொண்டார்.

இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த மனித சங்கிலி போராட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மூத்த வழக்கறிஞர்கள் அப்துல்மஜீத், 
ஆர் எஸ் சுப்பிர மணியன், ஜெகதீசன், கே பி குமார்பாண்டியன், நிஷாந்த் கண்ணன், ஜோன்ஸ், மாடசாமி பாண்டியன், சைலபதி, வேலுச்சாமி, முருகன், சின்னத்துரை பாண்டியன், தங்கதுரை, மூர்த்தி, செல்லத்துரை பாண்டியன், பிச்சி ராஜ், கோபால கிருஷ்ணன், பூசைத்துரை, திருமலை,அருண், ஜெபா, ஆறுமுகம் என்ற கண்ணன், செல்வகுமார், தாஹிரா பேகம், சங்கர சுப்பிர மணியன், சண்முகவேலு, மற்றும் தென்காசி செங்கோட்டை ஆலங்குளம் சிவகிரி சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் மாடக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்