காவல்துறை, பத்திரிகை, மருத்துவம், வழக்கறிஞர் என துறை சாராத நபர்கள் வாகனங்களில் இருந்த ஸ்டிக்கரை பிரித்து அகற்றிய கவால்துறையினர்.!

சென்னை

காவல்துறை, பத்திரிகை, மருத்துவம், வழக்கறிஞர் என துறை சாராத நபர்கள் வாகனங்களில் இருந்த ஸ்டிக்கரை பிரித்து அகற்றிய கவால்துறையினர். வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. 

சென்னை பழையமகாபலிபுர சாலை, காரப்பாக்கத்தில் பள்ளிகரணை போக்குவரத்து உதவி ஆணையர் செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் சிலர் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர், மருத்துவர், ஆர்மி என ஸ்டிக்கர் ஒட்டியிருந்தனர். 

இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை மடக்கி சோதனையிட்டனர். அதில் வாகனத்தில் வந்த யாரும் அந்த துறை சார்ந்த நபர்கள் இல்லையென தெரியவந்தது. 

அவர்களுக்கு அறிவுரை கூறி இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என அதனை பிரித்து அகற்றினர். 

மேலும் சிலரிடம் உறவினர்கள் அந்தந்த துறையில் இருந்தால் அவர்கள் இருக்கும் போது தான் ஸ்டிக்கர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சிலர் வாகனங்களில் இருந்து ஸ்டிக்கரை பிரிக்கக்கூடாது என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இது போன்ற ஸ்டிக்கர் ஒட்டி சமூகத்தில் தவறான காரியங்களில் ஈடுபடுவதும், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்லவும் இதுபோன்று பயன்படுத்துவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செய்தியாளர்

         S S K