வெளிநாட்டில் வேலைபார்க்கும் நபரின் மனைவியைக் கொன்ற பால் வியாபாரி , போலீசிடம் வாக்குமூலம். !
தென்காசி
தென்காசி மாவட்டம் அருணாசலபுரத்தைச் சேர்ந்தவர் முருகச்செல்வி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும்நிலையில் 10 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விடிந்து நீண்ட நேரம் ஆகியும் முருகச்செல்வி வெளியே வரவில்லை.
இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தோழி ஒருவர், முருகச்செல்வி எங்கே சென்றார்? ஏன் இன்னும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை? என ஷாக் ஆகினார். உடனே அவரது வீட்டிற்கு சென்றபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. சத்தம் போட்டும் வெளியே வராததால், உள்ளே சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி. குளியலறையில் முருகச்செல்வி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
அதைக்கண்டு பதறிப்போன அவரது தோழி, அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து, ஊர்க்காரர்களிடம் தகவலை சொல்லி போலீசாருக்கு போன் செய்துள்ளனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குழந்தையுடன் தனியாக வசித்துவந்த முருக செல்விக்கு என்ன நடந்தது? யார் அவரை கொலை செய்தார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சம்பவத்தன்று இரவில் இதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான சரத் என்பவர் கடும் பதற்றத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக ஊர்க்காரர்களில் ஒருவர் போலீசாருக்கு துப்பு கொடுத்துள்ளார்.
மேலும், கொலை செய்யப்பட்ட நேரத்தில் செல்போன் டவரில் பதிவான மொபைல் எண்களில், சரத்தின் எண்ணும் மேட்ச் ஆகியுள்ளது. இதனால் சரத்தை தூக்கி காவல் நிலையத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த சரத், ஒரு கட்டத்தில் தன்னை விசாரித்துக் கொண்டிருந்த காவலர்களை அலற விட்டுள்ளார்.
தனியாக வசித்து வந்ததால் நகைக்காக முருகச்செல்வியை கொலை செய்ததாக போலீசிடம் சரத் கூறியுள்ளார். திட்டமிட்டு முருகச்செல்வியின் வீட்டிற்குள் புகுந்தவர், கம்பியால் தலையில் அடித்து அவரை கொலைசெய்து தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி உள்ளார். இதனை அடுத்து சரத்தை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நகைக்காக தனியாக வசித்துவந்த பெண்ணை, பால் வியாபாரி கம்பியால் தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
