பெசன்ட் நகர் கடற்கரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தில்லுமுல்லு .!
சென்னை
பெசன்ட் நகர் கடற்கரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தில்லுமுல்லு
கிரசன்சியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் மாரத்தான் நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு அதிமுகவினர் மாரத்தான் நடத்தியதால் சர்ச்சை
தில்லு முல்லு செய்த இரு தரப்பு மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தென் சென்னை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி. கே.பழனிச்சாமியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.கே.அசோக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சிக்கு குரோம்பேட்டையை சேர்ந்த கிரசன்சியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் அனுமதி பெறப்பட்டு தில்லுமுல்லு செய்து அதிமுகவினர் நடத்தியது தெரியவந்துள்ளது.
இதை அறிந்த சாஸ்திரி நகர் போலீஸார் இரு தரப்பினர் மீதும் எதிர்க்கட்சியின் அழுத்தத்தின் காரணமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
எனவே இது குறித்து உடனடியாக போலீசார் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிமுகவினருக்கு விஷ்வாசம் காட்டி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது என்ன ஆதாயத்திற்காக என்பது காவல்துறையினருக்கே வெளிச்சம்.
செய்தியாளர்
S S K