தென்காசி மாவட்ட ஆட்சியரிடம், ஆதித்தமிழர் பேரவை சார்பில் கார்த்திகா புகார் மனு.!
தென்காசி
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம், ஆதித்தமிழர் பேரவை சார்பில் கார்த்திகா புகார் மனு
தென்காசி டிச 03
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கார்த்திகா என்பவர் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மேலநீலித நல்லூர் ஒன்றியம், திருமலாபுரம் கிராமத்தில்வசித்து வருகிறேன்எனக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் நான் ஆதி திராவிட அருந்ததியர் இனத்தை சார்ந்தவள் தென்காசி மாவட்டம் மேல நீலிங்கநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சேர்ந்த மரம் மஜரா ஊராட்சி மன்றத்தில் கணினி இயக்குனராக நேர்மையாக பணி செய்து வருகிறேன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவரின் கணவர் ரவி என்ற மாரிமுத்து நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் எங்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரவி என்ற மாரிமுத்து என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து அடிக்கடி பல பதிவேடுகளையும் மற்றும் ஆவணங்களையும் அவருடைய வீட்டிற்கு எடுத்துச் செல்வார்.
மேலும் அனைத்து ஆவணங்களிலும் தலைவரின் கையெழுத்தை இவரே பதிவிடுவார்.கடந்த மாதம் 25ஆம் தேதி சுமார் 11:30 மணி அளவில் பல ஆவணங்களை சட்டத்திற்கு புறம்பாகவும் முறைகேடாகவும் என்னை எழுதச் சொன்னார்.
நான் அந்த செயல்களை செய்ய மறுத்தேன் உடனே என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி பல தகாத அசிங்கமான வார்த்தையால் திட்டினார்.
இந்த அலுவலகம் எனது அலுவலகம் நீ இனி இங்கு வேலை பார்க்க கூடாது அலுவலகத்தை விட்டு வெளியே போ என்று கூறியதோடு அசிங்கமான வார்த்தையால் பேசினார்.
எனவே அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அதில் கூறப் பட்டுள்ளது.
இதில் கார்த்திகா, முத்துக்குமார், ஆதி தமிழர் பேரவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கை மதன், தெற்கு மாவட்ட செயலாளர் தென்தமிழரசு, வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷம்னா, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொதிகை செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் லட்சுமணன், நிதி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
