அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திரு விழா.!

ஆண்மீகம்

அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திரு விழா.!

கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே ஏரிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் சுவாமி திருக்கோவில் பரணி மஹா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது, இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி ஏரிக்கரையோரம் 12 ம் நூற்றாண்டை சார்ந்த அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திரு விழாவினை முன்னிட்டு கொடி ஏற்றத்துடன் துவங்கி தீபத் திருவிழா நடைபெற்று வந்தது.

இந்த தீபதிருநாளினை முன்னிட்டு  இன்று அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் பரணி மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

165 கிராம மக்கள் இணைந்து நடத்திய இந்த தீபத் திருநாளினை முன்னிட்டு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னார் திருக்கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தின் முன்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனை அடுத்து வாண வேடிக்கையுடன் பரண் மேல் மஹா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. இதனை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு தீபம் ஏற்றி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவில் சன்னதி கருவறையில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த காலப்பைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்கராப் பூஜைகள் மற்றும் அலங்கார தீபாதரணைகளும் காண்பிக்கப்பட்டது.

மேலும் இதேப்போல  சூரன்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள 
ஶ்ரீ சௌர்ண கர்ஷன பைரவர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் திருக்கோவில்களிலும் இன்று கார்த்திகை தீபத் திருநாளினை முன்னிட்டு மஹாதீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த மஹா தீப வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ