குற்றாலத்தில் எக்ஸ்னோரா சார்பில் மரக்கன்றுகள் வழங்கல் .!

தென்காசி

குற்றாலத்தில் எக்ஸ்னோரா சார்பில் மரக்கன்றுகள் வழங்கல் .!

குற்றாலத்தில் எக்ஸ்னோரா சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

தென்காசி ஜூலை 12

தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா சார்பில் குற்றாலம் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில் குற்றாலத் திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி களுக்கு தென்காசி மாவட்டஎக்ஸ்னோரா அமைப்பின் சார்பில்
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி 
நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு  தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் ப.சங்கர நாராயணன்தலைமை வகித்தார் குற்றாலம்  ஐ.ஒ.பி வங்கியின் மேலாளர்  உமாதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குற்றாலம் வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் 300 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கு  மரக் கன்றுகள் வழங்கப் பட்டது.இந்நிகழ்ச்சிக்
கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா  நிர்வாகிகள்  ராசிசுரேஷ்  முருகையா,துரை மீனாட்சிநாதன்  ஆகியோர் 
செய்திருந்தனர். முடிவில் தென்காசி சிட்டி எக்ஸ்னோரா  தலைவர் சீனிவாசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்