மேலகரம் பேரூர் திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை .!
தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை
தென்காசி ஜூலை 3
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின்
படி 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு 10 14 15 வார்டுகளில் மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை துணைச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக பார்வையாளர் கலை கதிரவன் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்
நிகழ்ச்சியில் இலக்கிய அணி செயலாளர் பூபதி ஒன்றிய பிரதிநிதி ஈன முத்துப் பாண்டியன் வேலு விஜயகுமார் பட்டத் தேவர் குடியிருப்பு கணேசன் சந்திரன் குமாரவேல் செந்தில் முருகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்