குற்றாலம் அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு4ஆண்டுகள் சிறை .!

தென்காசி

குற்றாலம் அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு4ஆண்டுகள் சிறை .!

குற்றாலம் அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு4ஆண்டுகள் சிறை

தென்காசி, செப்., 11

தென்காசி மாவட்டம், குற்றாலம் போலீஸ் சரகம் மேலமெஞ்ஞானபுரம் கிராமத்தில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட
மேலமெஞ்ஞானபுரம் பகுதியை சார்ந்தவர் கலா இவருக்கு கதிரேசன் என்பவருடன் திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து சென்றார். அதனைத் தொடர்ந்து கலாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஏழுமலை (வயது 47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில் ஏழுமலை ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் அப்போது மனைவி கலாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 06.11.2018 அன்று கணவன் மனைவி யிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை கத்தியால் கலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இது தொடர்பாக கலா குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கலா அளித்த புகாரியின் அடிப்படையில் குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு தென்காசி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஸ்டல் பபிதா ஏழுமலைக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹெர்குலஸ் ஆஜராகி வாதாடினார். 

ஏழுமலை ஏற்கனவே ஒரு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்

AGM கணேசன்