அதிமுகவுக்கு செக் வைத்த தவெக.. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் - டிடிவி , செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது என்ன?

த வெ க

அதிமுகவுக்கு செக் வைத்த தவெக.. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் - டிடிவி , செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது என்ன?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

தமிழக அரசியலில் இந்த மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்கள் இருவரும் அடுத்து எந்தப் பக்கம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆட்சியில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும், பொங்கலுக்குள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.