அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஏ.ஆர்.டி மையத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஏ.ஆர்.டி மையத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஏ.ஆர்.டி மையத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மரு.க.சத்தியபாமா, எம் எஸ் (பொது மருத்துவம்) தலைமையில்  ஏற்கப்பட்டது

உறுதிமொழி

எச். ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன், அறிந்ததை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன், புதிய எச்ஐவி எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவேன், தன்னார்வமாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள முன் வருவேன், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்று உள்ளவரை அரவணைப்பேன், அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன் என உளமாற உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர்  மரு.க.சத்யபாமா அவர்கள் கூறுகையில் .......
எய்ட்ஸ் நோயின் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எய்ட்ஸ் எச்ஐவியுடன் வாழும் நபர்களுக்கான ஆதரவை அதிகரித்தல், எச்ஐவி பரவலை தடுக்கும் அணுகுமுறைகளை தழுவுவதன் உரிமைகளையும் அதன் முக்கியத்துவத்தை பயனாளர்களுக்கு உணர்த்துதல் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் இது குறித்து ஏ .ஆர்.டி மையத்தின் பொறுப்பு மருத்துவ அலுவலர் மரு. ஜெகன்மோகன் அவர்கள்......
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக இந்நோய்க்கு தடுப்பு முறையே சிறந்தது,  எய்ட்ஸ் நோயை வெல்வோம் எய்ட்ஸ் இல்லா உலகை படைப்போம், பாதுகாப்பான உடலுறவு கொள்வோம், பாலியல் உறவின்போது ஆணுறைகளை பயன்படுத்துவோம், பாதுகாப்பான ஊசி பயன்படுத்துவோம், எய்ட்ஸ் நோய் பரவலை தடுப்போம் எயிட்ஸ் நோயை ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் நமது இரத்தத்தை தன்னார்வலாக பரிசோதித்து கொள்வோம், பாதுகாப்பாக இருந்து சரியான நேரத்தில் உரிய கூட்டு மருந்தான ஆன்டி ட்ரெட்ரோ வைரல் மருந்துகள் (ஏ ஆர் டி ) மூலம் சிகிச்சை பெறுவோம், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு, பாலியல் தொற்று குறித்து விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம் கர்ப்ப காலத்தில் உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் தாய் சேய்க்கு இந்நோய் பரவலை தடுக்கலாம் எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இவ்வைரஸ் தொற்றுக்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம் எய்ட்ஸ் நோய் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் சிகிச்சை முறைகளும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது எய்ட்ஸ் பயனாளர்கள் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவச சிகிச்சை முறைகளையும் இம்மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மரு க. சத்தியபாமா, எம்.எஸ் (பொது மருத்துவம்) அவர்கள் தலைமையேற்றார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு. ரோமுல் தயான் ராஜா, மருத்துவர்  மரு.தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஏ ஆர் டி பொறுப்பு மையத்தின் மருத்துவர் மரு.ஜெகன்மோகன்,  ஏ.ஆர்.டி மையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் அறிவு மணி, செவிலியர் கண்காணிப்பாளர் குணசுந்தரி, செவிலியர்கள்மீனா, உமா மகேஸ்வரி,  ஏஆர்டி மையத்தின் மருந்தாளுனர்  செல்வம்,  கிளிஸ்டர் திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் அருள், மாவட்ட எய்ட்ஸ் உள்ளோர் நலச் சங்கத் தலைவர் குமார்  மற்றும் எய்ட்ஸ் அலகு இதர தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட எய்ட்ஸ் பயனாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் உலக எய்ட் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ