காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அதிமுக வையும் கண்டித்து ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி

காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அதிமுக வையும் கண்டித்து ஆர்ப்பாட்டம். !

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும், பருகூர் சட்ட மன்ற உறுப்பினருமான  தே.மதியழகன்,MLA ஆணைக்கிணங்க, மாவட்ட அவைத் தலைவர் T.A.நாகராஜ்  தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் க.மகேந்திரன் முன்னிலையில் 24.12.2025 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் பாலேகுளி ஊராட்சி பாலேகுளி கிராமத்தில்  100 நாள் வேலை - இனி இல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ