கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். !
கிருஷ்ணகிரி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,தலைமையில் நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை(சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதார்கள் 4 நபர்களுக்கு ரூ.4 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை மற்றும் தொழிலாளர்களின் விபத்து நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர். அ.சாதனைக்குறள், தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் மாதேஸ்வரன், ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
