கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதிப்படத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக, அமைப்பு சீரமைப்பு இயக்கம் என்ற பெயரில், நாடு முழுவதிலும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அதன் வாயிலாக தொண்டர்களின் கருத்தை கேட்டு புதிய மாவட்டத் தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கர்நாடக மாநிலம், பெங்களூரு, சிவாஜி நகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத்  நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவர் கிருஷ்ணகிரி, ஒசூர், பர்கூர் , வேப்பனஹள்ளி, ஒசூர், தளி ஆகிய ஆறு சட்டமன்ற  தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சினர்களை நேரடியாக சந்தித்து மத்தியில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுசேர்க்கும் விதமாக கருத்து கேக்கும் பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு தகுதியான மாவட்டத் தலைவர் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒசூரில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில், கமிட்டி ஒருங்கிணைப்பாளர்  கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் வசந்த்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டதிற்கு தகுதியான மாவட்டத் தலைவர் நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் கருத்துக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை சிறப்பாத வழி நடத்திட யாரை தலைமையாக நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்துள்ளனர். .

இதுகுறிதது காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை அறிக்கையாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியால் எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்

அப்போது  மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், திட்டக் குழு உறுப்பினர் ரகு, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் முத்து, முன்னாள் வட்டாரத் தலைவர் செல்வராஜ், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் கவியரசன் முன்னாள் நகர தலைவர்கள், வின்சென்ட், தக்காளி தவமணி, ராமசந்திரன், சிறுபான்மை துறை முஸ்தப்பா, குரும்பட்டி டெய்லர் ஜெயவேல், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்  சத்திவேல், முன்னாள் தலைவர்கள் நெடுங்கல் குட்டி கவுண்டர், ஆசிரியர் கணபதி, அரசம்பட்டி தலைவர் சம்பத், கால்வே ஹள்ளி முத்துசாமி, மாதேப்பட்டி சத்திவேல், நெடுங்கல் அன்பழகன், அக்பர் பாஷா, ராமமூர்த்தி, வேலம்பட்டி கவுண்டர் சுப்பிரமணி, ஒப்பந்ததாரர் சிவராஜ், பச்சிலை வைத்தியர் தனபால், சந்தாபுரம் கோவிந்தன், தேவேந்திரன்  உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆசிரியர் கோகுல், கோவிந்தன், சரவணன், கருணாமூர்த்தி, பண்ணி ஹள்ளி கோவிந்தசாமி, ஜெகதாப் சென்னியப்பன்,  சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ